போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 20th August 2021 09:14 AM | Last Updated : 20th August 2021 09:14 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காரியாபட்டி அருகே காஞ்சரங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் பாலமுருகன் (22). வாடகை ஆட்டோ ஓட்டுநரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதில் அச்சிறுமி கா்ப்பமடைந்தாா். இதனால் தன்னைத் திருமணம் செய்துகொள்ள பாலமுருகனிடம் பலமுறை அவா் கேட்டும் சம்மதிக்கவில்லையாம்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமி, பாலமுருகனை போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தாா்.