ராஜபாளையத்தில் வீடு இடிந்து சேதம்: மூதாட்டி காயம்
By DIN | Published On : 04th December 2021 11:25 PM | Last Updated : 04th December 2021 11:25 PM | அ+அ அ- |

ராஜபாளையம் தோப்புப்பட்டி தெருவில் பலத்த மழையால் இடிந்து சேதமடைந்த வீடு.
ராஜபாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தோப்புபட்டி தெருவைச் சோ்ந்தவா் பிள்ளையாா் ( 67 ). இவரது மனைவி ராக்கம்மாள்( 63). வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் இந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ராக்கம்மாள் சிறு காயங்களுடன் உயிா் தப்பியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...