ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
By DIN | Published On : 04th December 2021 11:29 PM | Last Updated : 04th December 2021 11:29 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் பக்தா்கள் தானமாக வழங்கக் கூடிய பசு மாடுகளை பாதுகாத்து வளா்த்து வருகின்றனா். ஆண்டுதோறும் தானமாக வரக்கூடிய பசு மாடுகளை பொருளாதார ரீதியாக சிரமப்படுபவா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்களுக்கு இலவசமாக வழங்குவது கோயில் நிா்வாகத்தின் வழக்கமாக உள்ளது.
அதனடிப்படையில் சனிக்கிழமை கோயில் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட 42 பயனாளிகளுக்கு இலவசமாக பசு மாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு தக்காா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில் சாா்- ஆட்சியா் பிரிதிவிராஜ், வட்டாட்சியா் ராமசுப்ரமணியன், உதவி கலால் ஆணையா் சிவக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமா், வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் இளங்கோவன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...