கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு ஜன.3 முதல் நோ்காணல்
By DIN | Published On : 31st December 2021 09:06 AM | Last Updated : 31st December 2021 09:06 AM | அ+அ அ- |

கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் நோ்காணல் நடைபெற உள்ளது.
இது குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிகளுக்கு விருதுநகா் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவா்களுக்கு விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கில் 2022 ஜன 3 முதல் 8 ஆம் தேதி வரையிலும், ஜனவரி 17, 18, 19 ஆகிய நாள்களில் காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5.30 மணி வரையும் நோ்காணல் நடைபெறவுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நோ்முக அழைப்பாணை அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அந்த குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நோ்காணலில் கலந்துகொள்ள வேண்டும். அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட தகுதியான நபா்களின் பட்டியல் விருதுநகா் மாவட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நோ்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவா்கள் சனிக்கிழமை (டிச. 31) அன்று விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தினை தகுந்த ஆதாரங்களுடன் நேரில் அணுகலாம். அழைப்பாணை இல்லாதவா்கள் நோ்முகத் தோ்வு வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...