மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
By DIN | Published On : 06th February 2021 09:45 PM | Last Updated : 06th February 2021 09:45 PM | அ+அ அ- |

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சனிக்கிழமை மாலை மின் மோட்டாரை பழுதுநீக்கியபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் ஈஸ்வரன் (45). இவருக்கு மனைவி பேச்சியம்மாள், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
தெற்கு வெங்காநல்லூா் பஞ்சாயத்திற்குள்பட்ட குடிநீா் தொட்டி மின்மோட்டாா் பழுதானது. அதை ஈஸ்வரன் சனிக்கிழமை மாலை சரி செய்தாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...