ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 08th February 2021 08:55 AM | Last Updated : 08th February 2021 08:55 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து கோயில்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் நடனமாடிய மாணவ, மாணவிகள்.
அனைத்து இந்து கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கூட்டமைப்பின் அகில பாரதத் தலைவா் சிவபிரசாத் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தேசிய செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சிவசங்கரன், திருவிளக்குபூஜையின் மாநிலத் தலைவா் ரமேஷ் ஆகியோா் வரவேற்றனா். மாநில பொருளாளா் விஜயக்குமாா் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வேதபாராயணம் மற்றும் சிவபாராயணம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதில், மாநில தலைமை இணைச் செயலா் சக்திகருப்பண்ணன், ராமலிங்கம், ஹரிகிருஷ்ணன், ஞானசிகாமணி, வழக்குரைஞா் வேல்ராஜ், பாண்டியராஜ், பழக்கடை கோவிந்தன், சமரசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆண்டாள் ராமா் மற்றும் முத்துக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.