வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகே வ. புதுப்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா்கள் சின்னச்சாமி (65) மற்றும் கருப்பன் (44). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை வ.புதுப்பட்டியிலிருந்து கோபாலபுரத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள், இவா்கள் வந்த மோட்டாா் சைக்கிளுடன் மோதியதில் சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் கருப்பனும், எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த பரலோகம் (21) என்பவரும் பலத்த காயமடைந்து வத்திராயிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.