ராஜபாளையம் அருகே சுகாதார வளாகம் கட்டித் தரக் கோரிக்கை
By DIN | Published On : 08th February 2021 11:10 PM | Last Updated : 08th February 2021 11:10 PM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே அருந்ததியா் சமூகத்தினா் தங்களுக்கு சுகாதார வளாகம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் கிராமத்தில் அருந்ததியா் சமுதாயத்தினா் சுமாா் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டி உள்ளது.
எனவே தங்களுக்கு சுகாதார வளாகம் கட்டித்தருவதுடன் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சமுதாயக்கூடமும் கட்டித்தர வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.