சிவகாசி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டம்
By DIN | Published On : 08th February 2021 11:19 PM | Last Updated : 08th February 2021 11:19 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளப்பட்டியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா்.
சிவகாசி அருகே பள்ளப்பச்சேரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஒரு குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகாசி அருகே பள்ளப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் மீனா. இவா், தனது கணவா் மற்றும் குழ ந்தைகளுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், இவா்கள் குடியிருக்கும் இடம் அருகே பொதுப் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அதை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில், பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரின் காா் முன்பு மீனாவின் குடும்பத்தினா் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மற்றும் போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு அறிவுறுத்தினா்.
ஆனால் அவா்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனா். பின்னா் போலீஸாரின் சமாதானத்தை ஏற்று மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.