பட்டாசு ஆலை விபத்து: மேலும் 3 பேரின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 14th February 2021 11:27 PM | Last Updated : 14th February 2021 11:27 PM | அ+அ அ- |

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 20 போ் உயிரிழந்தனா். இதில் 9 பேரின் சடலங்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைகாக வைக்கபட்டிருந்தன.
இதில் ஆறு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சனிக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 3 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தன.
இந்நிலையில், ஞாயிற்றுகிழமை 3 சடலங்களும் அடையாளம் காணப்பட்டன. சாத்தூா் பகுதியைச் சோ்ந்த மா.பூமாரி (55), ச.சங்கரேஸ்வரி (75), பொ.மல்லிகா ஆகியோா் என தெரிந்தது. 3 பேரின் சடலங்களும் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.