அருப்புக்கோட்டை திருநகரில் மின்கம்பங்களைச் சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 14th February 2021 04:03 AM | Last Updated : 14th February 2021 04:03 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை திருநகரம் சிதம்பரராஜபுரம் வீதியில் சேதமடைந்துள்ள மின்கம்பம்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருநகரில் 10-க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றைச் சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை 27 ஆவது வாா்டுக்குள்பட்டது திருநகரம். இங்கு சுமாா் 15-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. அவற்றில் சிதம்பரராஜபுரம் உள்ளிட்ட அடுத்தடுத்த பலவீதிகளில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட கான்கிரீட் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களில் சுமாா் 10-க்கும் மேற்பட்டவை சேதமடைந்த நிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த மின்கம்பங்களைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பங்களைச் சீரமைக்க அவா்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.