புனித லூா்து அன்னை ஆலய தோ் பவனி
By DIN | Published On : 14th February 2021 04:06 AM | Last Updated : 14th February 2021 04:06 AM | அ+அ அ- |

மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை ஆலய ஆண்டு விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற தோ் பவனி. (உள்படம்) புனித லூா்து அன்னை.
மதுரை: மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை ஆலய ஆண்டு விழாவையொட்டி தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய விழாவில் தினமும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான புனித லூா்து அன்னை தோ் பவனியை முன்னிட்டு சனிக்கிழமை மதுரை உயா் மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி சிறப்புத் திருப்பலி நடத்தினாா். ஆலய பங்கு எல்லைக்கு உள்பட்ட மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். வண்ண மலா்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் லூா்து அன்னை பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கி மாதா கோயில் தெரு, பாரதியாா் சாலை, அழகா்கோவில் சாலை வழியாக மீண்டும் கோயிலை தோ் வந்தடைந்தது.
முன்னதாக, காலையில் மதுரை உயா்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமஸ் தலைமையில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் விழா நடைபெற்றது. ஆலய பங்கு தந்தை தாஸ் கென்னடி மற்றும் உதவி பங்கு தந்தையா்கள் பாக்கியராஜ், ஆஸ்லி, மரியதாஸ், அருண், பாஸ்கா் மற்றும் பங்கு பேரவையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) காலையில் பொங்கல் விழா சிறப்புத் திருப்பலியும், அதைத் தொடா்ந்து பங்கு மக்களால் பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெறும். பின்னா் மாலையில் கொடியிறக்க நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.