சிவகாசியில் ரூ.1.30 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் தொடக்கி வைப்பு
By DIN | Published On : 18th February 2021 11:44 PM | Last Updated : 18th February 2021 11:44 PM | அ+அ அ- |

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.30 கோடி ஒதுக்கப்பட்டு, நாரணாபுரம் ஊராட்சி போஸ் காலனி, லட்சுமியாபுரம், ராஜீவ்காந்தி நகா், விஸ்வநத்தம் ஊராட்சி ஐயப்பன் காலனி, முருகையாபுரம், பெரியாா் காலனி, சித்துராஜபுரம் ஊராட்சி ராமசாமி நகா், துலுக்கபட்டி, தேவா்குளம் ஊராட்சி அம்மன் நகா், கிச்சநாயக்கன்பட்டி ஊராட்சி போடுரெட்டியபட்டி, பூலாஊரணி ஊராட்சி தேன் காலனி ஆகிய இடங்களில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள நீா்த்தேக்க மேல்நிலை தொட்டிகளையும், பள்ளபட்டி, போஸ் காலனி, சிலோன் காலனி ஆகிய இடங்களில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடங்களையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், சிவகாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G