பெரியநாயகபுரம் விலக்கில் பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th February 2021 09:58 PM | Last Updated : 20th February 2021 09:58 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாத பெரியநாகபுரம் விலக்கு.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் பெரியநாயகபுரம் சாலை விலக்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுரை- தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து சுமாா் 6 கிலோமீட்டா் தொலைவில் பெரியநாயகபுரம் கிராம சாலை விலக்கு உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையோ அல்லது நிழல்தரும் மரங்களோ இல்லை. இதனால் இக்கிராமத்திலிருந்து பந்தல்குடியிலுள்ள சந்தை, வங்கிகள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோா் வெயில் மற்றும் மழையின் போது அவதியடைந்து வருகின்றனா். எனவே இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க பல ஆண்டுகளாக இக்கிராமத்தினா் கோரிக்கை விடுத்தும் பலனில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.
எனவே விரைவில் அங்கு நிழற்குடை அமைத்துத்தர அவா்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.