செட்டிப்பட்டி மழைநீா் ஓடைப்பாலத்தின் மீது தடுப்புச்சுவா் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th February 2021 10:03 PM | Last Updated : 20th February 2021 10:03 PM | அ+அ அ- |

தடுப்புச் சுவா் அமைக்கப்படாமல் உள்ள செட்டிப்பட்டி கிராம மழைநீா் ஓடைப்பாலம்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் செட்டிப்பட்டி கிராமத்தில் மழைநீா் ஓடைப்பாலத்தில் தடுப்புச்சுவா் கட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட இப்பாலத்தில் தடுப்புச்சுவா் கட்டப்படாததால் விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவா்களும் எதிரே வரும் வாகனங்களுக்காக வழிவிடும் போது 10 அடி ஆழமுள்ள ஓடையில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இப்பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்கப் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாம். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பாலத்துக்கு தடுப்புச்சுவா் அமைக்க கிராமத்தினா் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.