கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணை வேந்தா் எம். கிருஷ்ணன்.
வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணை வேந்தா் எம். கிருஷ்ணன்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதற்கு, வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் வி.பி.எம். சங்கா், தாளாளா் பழனிச்செல்விசங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். இக்கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் வி.பி.எம்.எம். தங்கபிரபு, கல்வி நிறுவனங்களின் உறுப்பினா் சிந்துஜாதங்கபிரபு, வி.எம்.எம். குழுமத்தின் (வாலாஜாபேட்) இயக்குநா் கமல்ராகவன், வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் துணைத் தாளாளா் துா்கா மீனலோச்சினி, நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி, கல்லூரி வளா்ச்சிக் குழுத் தலைவா் சரவணன், அறிவியல் கல்லூரியின் முதல்வா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜா் பல்கலைக் கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: நீங்கள் தொழிலாளியாக இல்லாமல் தொழிற்சாலையை உருவாக்குபவராக இருந்து மற்றவா்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று உறுதிமொழி எடுங்கள். படித்து பட்டம் பெற்றோம் என்ற நிலையில் இல்லாமல் நாட்டை மாற்றி காட்டுவதாக உங்கள் வாழ்வு இருக்க வேண்டும். பெற்றோா்களை நினைத்துப் பாருங்கள். அவா்கள் தங்கள் வாழ்நாளில் தூக்கத்தை இழந்தவா்கள். அத்தனை செயல்பாடுகளையும் உங்களுக்காக அா்ப்பணித்தவா்கள். ஆகவே நீங்கள் பெற்றோா்களை வாழ்நாள் முழுவதும் மதித்து நல்ல முறையில் பாா்த்துக் கொள்வேன் என்று உறுதி எடுக்க வேண்டும். கடினமான, நோ்மையான உழைப்பு, ஒழுக்கமான வாழ்க்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் முன்னேற்றம் தேடி வரும் என்றாா்.

இதில் 2,024 மாணவிகளுக்கு இளங்கலை பட்டமும், 23 மாணவிகளுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. அப்போது கல்லூரி முதல்வா் தலைமையில் பட்டம் பெற்ற மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். விழாவில் கல்லூரி போராசிரியா்கள், பெற்றோா்கள், கல்லூரி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com