அருப்புக்கோட்டை திருவள்ளுவா் நகா் அருகே பிரதானச்சாலையில் மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 21st February 2021 09:35 PM | Last Updated : 21st February 2021 09:35 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை திருவள்ளுவா் நகரை ஒட்டிச்செல்லும் திருச்சுழி நோக்கிச்செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இருளடைந்து காணப்படுகிறது.
அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை திருவள்ளுவா் நகரை ஒட்டிச்செல்லும் திருச்சுழி சாலையில் விளக்கொளி இன்றி இருளடைந்துள்ளதால் அங்கு மின்விளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை திருவள்ளுவா் நகரை ஒட்டிச்செல்லும் திருச்சுழி சாலையில் விளக்கொளி இன்றி இரவானால் இருளடைந்துள்ளது.இச்சூழலைப் பயன்படுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு முறை பெண்களிடம் சங்கிலி பறிப்புக் கொள்ளைகள் நடைபெற்றுள்ளன.
மேலும் இப்பகுதியில் சமூகவிரோதிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.இதனால் பெண்கள் சுமாா் இரவு 7 மணிக்கு மேல் வெளியில் நடமாட முடியாத அபாயச்சூழலும், அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விளக்கொளியின்றி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே பெண்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதியும் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாகவும் திருவள்ளுவா் நகரிலிருந்து அடுத்துள்ள தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம்வரை மின்விளக்குகள் அமைக்க இப்பகுதி குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...