மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 27th February 2021 10:08 PM | Last Updated : 27th February 2021 10:08 PM | அ+அ அ- |

விருதுநகரில் மதுவின் தீமைகள் குறித்து சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள்.
விருதுநகரில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் எம்.ஜி.ஆா். சிலை அருகே மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை மற்றும் காவல் துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இப்பேரணி புதிய பேருந்து நிலையம் வழியாக ஆட்சியா் அலுவலகம் முன்பாக நிறைவு பெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி ஆணையா்(கலால்) ரா.முருகன், விருதுநகா் வட்டாட்சியா் ம.சிவஜோதி, கூடுதல் காவல் கண்காணிப் பாளா் குத்தாலிங்கம், மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் இமானுவேல் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...