அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி ஸ்ரீ சத்குரு சுப்பாஞானியாா் கோயிலில் குருபூஜை மற்றும் மாசிமகம் பௌா்ணமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் பாளையம்பட்டியில் வாழ்ந்து, மாசி மகத்தன்று முக்தியடைந்த சத்குரு ஸ்ரீசுப்பாஞானியாா் சமாதியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமகத்தன்று ஆயிரவைசிய காசுக்காரச் செட்டியாா் உறவின்முறையினா் விழா நடத்தி வருகின்றனா்.
இதன்படி சனிக்கிழமை ஸ்ரீசத்குரு சுப்பாஞானியாருக்கு குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களுடன், தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.இவ்வழிபாட்டில் பங்கேற்ற சுமாா் 30-க்கும் மேற்பட்ட சிவனடியாா்களுக்கு சிறப்பு ஆடை தானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான தம்பதியா் பங்கேற்று சிறப்புப் பிரசாதம் பெற்றனா்.