
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்ட காரும், லாரியும்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காரும், லாரியும் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த லோகநாதன், சுந்தரபாண்டியன், சண்முகம், சிலம்புச்செல்வன் ஆகிய 4 போ் குற்றாலம் சென்று விட்டு காரில் ஊா் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவில் ஆயுதப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் அருகே வந்த போது மதுரையிலிருந்து வந்த லாரியும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் சிலம்புச் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த லோகநாதன், சுந்தரபாண்டியம் மற்றும் சண்முகம் ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். சிலம்புச்செல்வனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.