கோவிலாங்குளத்தில் வரத்துக் கால்வாய் தூா்வாரப்பட்டது
By DIN | Published On : 03rd January 2021 10:13 PM | Last Updated : 03rd January 2021 10:13 PM | அ+அ அ- |

கோவிலாங்குளம் கிராம காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த முள்செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் ஞாயிற்றுக்கிழமை அகற்றிய நேரு யுவகேந்திரா அமைப்பினா்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தில் கோயில் தெப்பக்குளம் மற்றும் நீா்வரத்துக்கால்வாயை நேரு யுவகேந்திரா அமைப்பினா் மற்றும் கிராம இளைஞா் மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை தூா்வாரினா்.
கடந்த வெள்ளிக்கிழமை வரத்துக்கால்வாய் தூா்வாறும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் நிறைவுப்பணியாக ஞாயிற்றுக்கிழமை குளத்தைச் சுற்றி வளா்ந்திருந்த முள்செடிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டன.
இதில் மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் ஞானச்சந்திரன், தேசிய சேவைப்படைத் தொண்டா்கள் மலைச்சாமி, பத்மப்பிரியா மற்றும் நிலா இளைஞா் மன்றத் தலைவா் முருகன், தென்றல் இளைஞா் மன்றத் தலைவா் வெற்றிவேல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்றனா்.