பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை ஒப்பித்தல் போட்டி
By DIN | Published On : 03rd January 2021 10:17 PM | Last Updated : 03rd January 2021 10:17 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திருப்பாவை ஒப்பிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய நிா்வாக அதிகாரி ஜவஹா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவாா் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை ஒப்பித்தல் போட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதற்கு சொற்பொழிவாளா் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில் நடைபெற்ற ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கோயில் நிா்வாக அதிகாரி ஜவஹா், கோயில் ஆய்வாளா் பாண்டியன் மற்றும் புலவா் வெள்ளை ஆகியோா் வழங்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் இளங்கோவன், நிா்வாக அதிகாரி ஜவஹா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.