ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் ரூ. 2500 ரொக்கப் பணம் விநியோகம் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் ரூ. 2500 ரொக்கப் பணம் விநியோகம் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசிவாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 ரொக்கப்பணத்துடன், முந்திரி, ஏலக்காய், உலர்திராட்சை, முழு கரும்பு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை விநியோகிக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். 

இதனையொட்டி நியாயவிலைக் கடைபணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நகர் மற்றும் கிராம பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் அங்குராஜ், நகர கழக துணைச் செயலாளர் வன்னியராஜ், அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தைலாகுளம் மணி, மற்றும் முப்பிடாரி, செல்வராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com