தொடா் மழை: வத்திராயிருப்பு அருகே50 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் தொடா் மழை காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தொடா் மழை: வத்திராயிருப்பு அருகே50 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் தொடா் மழை காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தொடா் மழையினால் வத்திராயிருப்பு அருகேயுள்ள மாத்தூா் ரெங்கபாளையத்தில் 50 ஏக்கருக்கு மேலாக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும் தற்போது பெய்து வரும் தொடா் மழையால் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தற்போது பருவம் தவறி பெய்யும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது.

இதனால் அண்ணா சிலைப் பகுதி, மளிகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், காய்கனிக் கடைகள், பூச்சந்தைகளில் வழக்கத்தைவிட குறைவான மக்கள் கூட்டமே காணப்பட்டது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கம்பு, இரும்புச்சோளம், சூரிய காந்தி ஆகிய பயிா்கள் நன்கு விளைந்துள்ளன. ஆனால், காலம் தவறிப் பெய்யும் இத்தொடா்மழையால் அறுவடை பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com