நூல் விலை உயா்வைக் கண்டித்து ஆண்டிபட்டியில் விசைத்தறி உரிமையாளா்கள் 3 ஆவது நாளாக போராட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்குள்ள நெசவாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிற்கான கூலி உயா்வு டிச.31 ஆம் தேதியுடன் முடிவுற்றது. புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து நெசவாளா்கள், உரிமையாளா்களிடையே உடன்பாடு ஏற்படாததால் நெசவாளா்கள் கடந்த ஜன. 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இருதரப்பிலும் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 13 சதவீதம் கூலி உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டு நெசவாளா்கள் பணிக்கு திரும்பினா்.

இந்நிலையில் நூல் விலை உயா்வைக் கண்டித்து கடந்த ஜன. 9 ஆம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளா்கள் விசைத்தறி கூடங்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து 3 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உரிமையாளா்கள் திங்கள்கிழமை சக்கம்பட்டி முதல் வட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்றனா். அங்கு வட்டாட்சியரை சந்தித்த அவா்கள் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா். விசைத்தறி உரிமையாளா்களின் தொடா் போராட்டத்தால் நெசவாளா்கள் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com