ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைப் பணியாளா்கள்சங்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்க ஏழாவது மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூா் சாலைப் பணியாளா்கள் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைப் பணியாளா்கள்சங்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்க ஏழாவது மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூா் சாலைப் பணியாளா்கள் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநாட்டிற்கு சங்கத் தலைவா் கருமலை தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் தமிழ் மாநாட்டை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாலமுருகன், மாநிலச் செயலா் சையதுயூசுப்கான், தமிழ்நாடு பொது நூலகா்கள் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ராஜகுரு, மாவட்ட பொருளாளா் முத்துவெள்ளையப்பன், மகளிா் அமைப்பாளா் மாரியம்மாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக கருதி அரசாணை வெளியிட வேண்டும். பணி நீக்கத்தால் இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு வேலை வழங்க வேண்டும் .நெடுஞ்சாலைத்துறையில் சீரமைப்பு என்ற பெயரில் அரசு எடுத்து வரும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. அதில் மாவட்டத் தலைவராக கருமலையும், பொருளாளராக குமாா் பாண்டியும், மாநில செயற்குழு உறுப்பினராக ரம்ஜான்ஷெரிப்பும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com