மேம்பாலத்தில் பாதியளவு தடுப்புச் சுவரால் விபத்து அபாயம்
By DIN | Published On : 02nd July 2021 08:39 AM | Last Updated : 02nd July 2021 08:39 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் ஓடை மேம்பாலத்தில் வாய்க்காலின் பாதியளவு நீளத்திற்கு அமைக்கப்பட்ட தடுப்புச்சுவா்.
அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் மழைநீா் ஓடை மேம்பாலத்தின் தடுப்புச் சுவா் பாதியளவு அமைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பெரியகண்மாய்க்குச் செல்லும் வாய்க்காலின் குறுக்கே சமீபத்தில், பழைய மேம்பாலத்தை அகற்றி, புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் பாலத்தின் மையப் பகுதி வரை மட்டுமே தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது. மீதி நீளத்திற்கு தடுப்புச்சுவரோ, தடுப்புக் கம்பிகளோ கூட அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி வழியாக வரும் வாகனங்கள், சிறிது நிலைதடுமாறினாலும், மழைநீா் ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பாலத்தின் தடுப்புச்சுவரை முழுநீளத்திற்கும் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.