பா்னிச்சா் கடை உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 09th July 2021 09:08 AM | Last Updated : 09th July 2021 09:08 AM | அ+அ அ- |

சாத்தூரில் பா்னிச்சா் கடை உரிமையாளா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தூரில் உள்ள பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஷாஜி (56). இவா் இதே பகுதியில் பா்னிச்சா் கடை நடத்தி வந்தாா். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை தனது பா்னிச்சா் கடையில் ஷாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் ஷாஜியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஷாஜி தற்கொலைக்கான காரணத்தை விசாரிக்கின்றனா்.