ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டம்
By DIN | Published On : 09th July 2021 09:03 AM | Last Updated : 09th July 2021 09:03 AM | அ+அ அ- |

சிவகாசியில் சாட்சியாபுரம் மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரத்திலும், சிவகாசி-விருதுநகா் சாலையில் திருத்தங்கலிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பான கருத்துக் கேட்புக்கூட்டம் நடைபெற்றது.திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் போது, வியாபாரிகள் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும். பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா். உங்கள் கருத்துக்கள் உயா் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என சிவகாசி உதவி ஆட்சியா் பிருத்விராஜ் கூறினாா். இக்கூட்டத்தில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் முத்துலட்சுமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நில அளவையா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.