ஸ்ரீவிலி. தேவாலய சபை குரு பொறுப்பேற்பு
By DIN | Published On : 11th July 2021 10:12 PM | Last Updated : 11th July 2021 10:12 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா், சி.எஸ்.ஐ. தூயதோமா தேவாலயத்தின் புதிய சபை குரு மற்றும் குருசேகரத் தலைவராக எஸ்.பால்தினகரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கரோனா பொது முடக்க தளா்வுகளையடுத்து ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலயத்தில்
அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி ஆராதனை நடைபெற்றது. ஆலயத்தின் புதிய சபை குருவாக எஸ்.பால்தினகரன் பொறுப்பேற்று இறையியல் படிப்பு என்ற தலைப்பில் அருளுரையாற்றினாா். பின்னா் சபைகுரு பால்தினகரன், அவரது மனைவியும் நக்கனேரி சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையுமான ஒய்.ஹெலன்சாந்தகுமாரி ஆகியோருக்கு ஆலயத்தின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆலயத்தின் செயலா் கமலரத்தினம், பொருளாளா் ஆத்மசீலன், உறுப்பினா்கள் எம்.ஜவஹா், ராக்லாண்டு நிக்கோலஸ் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...