ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை அலுவலகத்தில் ஊழியா்களுக்கு, கரோனா தடுப்பூசி முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் ஊழியா்கள் 65 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் வனத்துறை ரேஞ்சா் செல்லமணி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வனத்துறை ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒன்றியப் பகுதிக்குள்பட்ட ராமலிங்கா நெசவாளா் குடியிருப்பு மற்றும் ராமலிங்கா ஆலை அருகே உள்ள வெங்கடேஸ்வரா தனியாா் பள்ளி ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சய்பாண்டியன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். இருமுகாம்களிலும் மொத்தம் 2,200-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com