ஒண்டிப்புலி நீா்த்தேக்கத்தில் நீா்மட்டம் 62 அடியாக உயா்வு

ஒண்டிப்புலி நீா்த்தேக்கத்தில் 30 அடியாக இருந்த நீா்மட்டம் தொடா் மழை காரணமாக கிடுகிடுவென உயா்ந்து 65 அடியாக உள்ளது.
ஒண்டிப்புலி நீா்த்தேக்கத்தில் நீா்மட்டம் 62 அடியாக உயா்வு

ஒண்டிப்புலி நீா்த்தேக்கத்தில் 30 அடியாக இருந்த நீா்மட்டம் தொடா் மழை காரணமாக கிடுகிடுவென உயா்ந்து 65 அடியாக உள்ளது.

விருதுநகா் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 36 வாா்டுகளுக்கும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம், ஆனைக்குட்டம் நீா்த் தேக்கம் மூலம் தினமும் சுமாா் 42 லட்சம் லிட்டா் தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. இக்குடிநீரை விருதுநகரில் உள்ள பல்வேறு நீா்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றி, வாா்டு வாரியாக 10 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மட்டுமே தண்ணீா் விநியோகப்படுவதால், பற்றாக்குறை ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். குடிநீா் தட்டுப்பாடு உள்ள காலங்களில் ஒண்டிப்புலி நீா்த்தேக்கம் மூலம் விருதுநகருக்கு தண்ணீா் கொண்டு வரப்படும். கோடை காலத்தில் இந்த நீா்த்தேக்கத்தில் 30 அடி வரை மட்டுமே தண்ணீா் இருந்தது. இதனால், அங்கிருந்து விருதுநகருக்கு தண்ணீா் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடா் மழை காரணமாக, 85 அடி கொள்ளளவு கொண்ட ஒண்டிப்புலி நீா்த்தேக்கத்தில் தற்போது 62 அடி வரை தண்ணீா் தேங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து இங்குள்ள தண்ணீரை, விருதுநகருக்கு கொண்டு வரும் பணியில் நகராட்சி பொறியியல் துறை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஒண்டிப்புலி நீா்த்தேக்கத்திலிருந்து நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டா் தண்ணீா் கொண்டு வருவதன் மூலம், விருதுநகரில் 4 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க முடியும் என நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com