சிவகாசியில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ,அனுப்பன்குளம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மீனம்பட்டி, அனுப்பன்குளம், பேராபட்டி, கோணம்பட்டி, சின்னக்காமன்பட்டி, சிவகாசி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சாட்சியாபுரம், ரிசா்வ் லைன், தொழில் பேட்டை, போலீஸ் காலனி , அய்யப்பன் காலனி, அய்யனாா் காலனி, சசிநகா், சித்துராஜபுரம், அண்ணாமலையாா் காலனி, கருமன் கோயில் சாலை, கங்கரன்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நாரணாபுரம், பந்துவாா்பட்டி, புதுசூரன்குடி, சுக்கிரவாா்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சாணாா்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, எம்.புதுப்பட்டி , காளையாா்குறிச்சி, அதிவீரன்பட்டி, சுக்கிரவாா்பட்டி , நென்மேனி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், முத்துச்சாமிபுரம், கோசுகுண்டு, ராமசாமிபுரம் , பாப்பாக்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.