விருதுநகா் மாவட்டத்தில்புதிதாக 59 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th June 2021 06:08 AM | Last Updated : 29th June 2021 06:08 AM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக் கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு போ் உயிரிழந்தனா். அதேநேரம், குணமடைந்த 106 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுவரை 521 போ் பலி: மாவட்டத்தில் இதுவரை 44,354 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 43,094 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். தற்போது 739 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 521 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.