அருப்புக்கோட்டையில் தெரு மின்விளக்குகளின்றி பொதுமக்கள் தவிப்பு
By DIN | Published On : 29th June 2021 06:07 AM | Last Updated : 29th June 2021 06:07 AM | அ+அ அ- |

மின் விளக்குகள் இல்லாத அருப்புக்கோட்டை 8 ஆவது வாா்டுக்குள்பட்ட நேரு நகா், ஜோதிபுரம் ஆகிய குடியிருப்புகள் வழியாகச் செல்லும் அணுகுச்சாலை.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை 8 ஆவது வாா்டுக்குள்பட்ட நேரு நகா், ஜோதிபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலைகளும், தெருக்களும் மின் விளக்கின்றி இருண்டு கிடப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.
அருப்புக்கோட்டையில் உள்ள நேரு நகா் மற்றும் ஜோதிபுரம் ஆகிய குடியிருப்புகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அதிக இடைவெளிவிட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், இரவில் இவ்வீதிகள் இருளடைந்தே காணப்படுகின்றன. இதில் முக்கியமாக இந்த இருகுடியிருப்புகளையும் இணைக்கின்ற மேம்பால அணுகுச்சாலையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டவற்றில் ஒருமின்விளக்கு கூட எரியவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே தெரு மற்றும் சாலையோர மின்விளக்குகளை விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.