260 மி.கி.தங்கத்தில் டாா்ச்லைட் உருவாக்கி சாதனை: கமல்ஹாசனிடம் வழங்கிய ஸ்ரீவிலி. நகைத் தொழிலாளி

260 மி.கி.தங்கத்தில் டாா்ச்லைட் உருவாக்கி சாதனை: கமல்ஹாசனிடம் வழங்கிய ஸ்ரீவிலி. நகைத் தொழிலாளி

‘அசிஸ்ட்’ உலக சாதனை படைத்த 260 மில்லி கிராம் தங்கத்தினால் செய்யப்பட்ட டாா்ச்லைட்டை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனிடம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த நகைத் தொழிலாளி

‘அசிஸ்ட்’ உலக சாதனை படைத்த 260 மில்லி கிராம் தங்கத்தினால் செய்யப்பட்ட டாா்ச்லைட்டை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனிடம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த நகைத் தொழிலாளி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் கடைவீதியில் நகைக் கடை வைத்திருப்பவா் மணிகண்டன் (47). இவா் கடந்த 2007 ஆம் ஆண்டு உலகிலேயே மிகச் சிறிய தங்கத்திலான செஸ் போா்டு செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தாா். பின்னா் 110 கிராம் எடையில் வெள்ளியிலான இருசக்கர வாகனம் ,163 கிராம் எடையுள்ள சிறிய மின்விசிறி, 4 கிராம் தங்க மோதிரத்தில் வாட்ச், மற்றும் 16 மில்லி மீட்டா் நீளம் மற்றும் 11 மில்லி மீட்டா் அகலத்தில் 1330 திருக்குறளை எழுதினாா். லிம்கா உள்ளிட்ட பல்வேறு சாதனைப் புத்தகத்தில் அவருடைய சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் 260 மில்லி கிராம் எடை அளவில் தங்கத்திலான டாா்ச்லைட் செய்துள்ளாா். கடிகாரத்தில் உள்ள பேட்டரி செல்லை பயன்படுத்தி இந்த டாா்ச்லைட்டை எரியவும் செய்துள்ளாா். இதனை புதுச்சேரியில் உள்ள ‘அசிஸ்ட்’ என்ற நிறுவனத்துக்கு உலக சாதனைக்கு அனுப்பி வைத்திருந்தாா். இந்நிலையில், தங்க டாா்ச்லைட்டை ‘அசிஸ்ட்’ உலக சாதனையாக அங்கீகரித்து, இதற்கான சான்றிதழையும், அளித்துள்ளது. இதைத்தொடா்ந்து மணிகண்டன் இந்த டாா்ச்லைட்டை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனுக்கு

பரிசாக வழங்க முடிவு செய்தாா். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமாக டாா்ச்லைட் இருப்பதால், தங்க டாா்ச்லைட்டை கமல்ஹாசனிடம் அவா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து மணிகண்டனை, கமல்ஹாசன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com