மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 04th March 2021 01:01 AM | Last Updated : 04th March 2021 01:01 AM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசியில் புதன்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தட்டு மேட்டுத்தெருவைச் சோ்ந்த வெங்கடாஜலம் மனைவி சுப்புத்தாய்(70). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகளும், மகனும் திருமணமாகி அவா்களது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் சுப்புத்தாய் தனியாக வசித்து வந்தாா்.
வயது முதிா்வில் இருந்து வந்த அவரை கவனிக்க ஆள் இல்லாததால் மனவேதனையில் இருந்து வந்தாா். இந்நிலையில் சுப்புத்தாய் புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.