ராஜபாளையம் அருகே சுவாமி சிலை உடைப்பு
By DIN | Published On : 04th March 2021 12:59 AM | Last Updated : 04th March 2021 12:59 AM | அ+அ அ- |

03rjpm01_0303chn_86_2
ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தேவா் சிலை கோபுரத்தில் உள்ள சுவாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகேயுள்ள புத்தூா் கிராமத்தில் தேவா் சிலை உள்ளது. இந்த சிலையின் மேல் பகுதியில் உள்ள கோபுரத்தில் முருகன் சிலை உள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவில்
முருகன் சிலையை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். புதன்கிழமை இது தெரியவந்ததும் அப்பகுதியினா் கூடி குற்றவாளிகளைக் கைது செய்ய வலியறுத்தினா். சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் நாகசங்கா் மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் ஆகியோா் துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக வேறு சிலை வைத்து 3 சிசிடிவி கேமராக்களை பொருத்தினா். மேலும் குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயா்அதிகாரிகள் கூறியதால் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா். அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.