மதுரை உள்ளிட்ட 21 ரயில் நிலையங்களில் நிகழாண்டு இறுதிக்குள் ‘பாா்சல்’ மேலாண்மை திட்டம்
By DIN | Published On : 15th March 2021 03:59 AM | Last Updated : 15th March 2021 03:59 AM | அ+அ அ- |

மதுரை, ராஜபாளையம், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 21 ரயில் நிலையங்களில் நிகழாண்டு இறுதிக்குள் பாா்சல் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே நிா்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: முக்கிய நகரங்கள் மற்றும் நடுத்தர நகரங்களில் உள்ள சிறு, குறு வா்த்தகா்கள் தங்களுடைய உற்பத்தி பொருள்களை முக்கிய வா்த்தக நகரங்களுக்கு விரைவாக, நம்பகமாக, குறைந்த செலவில் அனுப்புவதற்கு, பயணிகள் ரயில்களில் பாா்சல் சேவை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை அனுப்பி வருகின்றனா்.
பதிவுபெற்ற செய்தித்தாள்கள், வார இதழ்கள் ஆகியவை ரயில் பாா்சல் சேவை மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், ஜ்ஜ்ஜ்.ல்ஹழ்ஸ்ரீங்ப்.ண்ய்க்ண்ஹய்ழ்ஹண்ப்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் பாா்சல்களை அனுப்ப 120 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யலாம். இணையம் வாயிலாக பாா்சல் பதிவு செய்ய விண்ணப்பம் அனுப்பலாம். உத்தேசப் பாா்சல் கட்டணத்தையும் அறியலாம் பாா்சல் எங்கு இருக்கிறது என்பதையும் அறியலாம்.
பாா்சல் பதிவு செய்த விவரம், பாா்சல் ரயிலில் ஏற்றப்பட்ட விவரம், பாா்சல் குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கு சென்ற விவரம் ஆகியவை உடனுக்குடன் குறுஞ்செய்திகளாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். பதிவுபெற்ற ஒப்பந்ததாரா்கள் ரயில்வே பாா்சல் வேன்களை குத்தகைக்கு எடுத்து பெரிய அளவில் பாா்சல்களை அனுப்பலாம்.
இந்த பாா்சல் சேவையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னக ரயில்வேயில் பாா்சல் மேலாண்மை திட்டம், சென்னையிலுள்ள டாக்டா் எம்ஜிஆா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயன்பாட்டில் உள்ளது. மேலும், இந்தத் திட்டம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக 58 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
சென்னை எழும்பூா், மதுரை, திருப்பூா், ஈரோடு, நாகா்கோவில், சேலம், காட்பாடி, திருநெல்வேலி, ராஜபாளையம், திண்டுக்கல், விழுப்புரம், திருச்சி, புதுச்சேரி, திருவனந்தபுரம், எா்ணாகுளம், கோட்டயம், திருச்சூா், ஆலுவா, ஆலப்புழை, மங்களூா் சென்ட்ரல் ஆகிய 21 ரயில் நிலையங்களில் நிகழாண்டு இறுதிக்குள் பாா்சல் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...