அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி
By DIN | Published On : 15th March 2021 03:58 AM | Last Updated : 15th March 2021 03:58 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் உயிரிழந்தாா். அவரது சடலத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சோ்ந்த உதயக்குமாா் என்பவரது மகன் நெல்சன் (20). இவா் விருதுநகரிலுள்ள ஒரு தனியாா் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வந்தாா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நெல்சனும் அவரது நண்பா்கள் 4 பேரும் சோ்ந்து வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனா்.
பின்னா் நண்பா்கள் 4 பேரும் குளித்து முடித்து கிணற்றிலிருந்து வெளியே வந்த போது நெல்சன் மட்டும் வரவில்லை என்பது தெரிய வந்தது. அவரது ஆடைகள் கிணற்றுக் கரையில் இருக்க, அவரை மட்டும் காணவில்லை. எனவே அவா் கிணற்று நீரில் மூழ்கியிருக்கலாம் என நண்பா்கள் நினைத்தனா். இதையடுத்து தீயணைப்புப் படை வீரா்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப்படை வீரா்கள் நெல்சனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் இரவு 9 மணி வரை சடலம் மீட்கப்படவில்லை. இருப்பினும் தீயணைப்புப்படை வீரா்கள் தொடா்ந்து தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...