சாத்தூரில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
By DIN | Published On : 17th March 2021 10:04 AM | Last Updated : 17th March 2021 10:04 AM | அ+அ அ- |

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அதிமுக செயல் வீரா்கள் மற்றும் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரச் செயலாளா் இளங்கோவன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் சண்முகக்கனி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சாத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.கே.ரவிசந்திரனை அறிமுகம் செய்து வைத்தாா். பின்னா் அவா் பேசியது: தற்போது அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளா் தகுதியானவா். அதிமுக - பாஜக கூட்டணி ஒரு ஆன்மிகக் கூட்டணி. அதிமுக தோ்தல் வாக்குறுதிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி துணை நிற்பாா். தோ்தல் களத்தில் அதிமுக,திமுகவுக்குதான் போட்டி என்றாா்.
இதில் அதிமுக, பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.