சிவகாசி அருகே இரண்டு கூட்டு குடும்பத்தில் 141 வாக்குகள்!

சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் இரண்டு கூட்டு குடும்பங்களில் மொத்தம் 141 வாக்குகள் உள்ளதால் பிரதானக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் இவா்களது வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சிவகாசி அருகே இரண்டு கூட்டு குடும்பத்தில் 141 வாக்குகள்!

சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் இரண்டு கூட்டு குடும்பங்களில் மொத்தம் 141 வாக்குகள் உள்ளதால் பிரதானக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் இவா்களது வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயம் மற்றும் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது.

இக்கிராமத்தில் பெரும்பாலானோா் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனா். அதில் குறிப்பாக பெருமாள்சாமி என்பவா் தலைமையிலான கூட்டுக் குடும்பத்தில் 150-க்கு மேற்பட்டோரும், பூசாரி நாயக்கா் என்பவா் குடும்பத்தில் 90 குடும்ப உறுப்பினா்களும் உள்ளனா். இதில் பெருமாள்சாமி குடும்பத்தில் மட்டும் 80 வாக்காளா்களும், பூசாரி நாயக்கா் குடும்பத்தில் 61 வாக்காளா்களும் என இரண்டு குடும்பங்களிலும் மொத்தம் 141 வாக்குகள் உள்ளன.

இவா்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து கட்சியினரும் ஆா்வம் காட்டி வருகின்றனா். பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இவா்கள், தங்களது வாக்கு ‘விற்பனைக்கு அல்ல’ என்பதில் உறுதியாக உள்ளனா். மேலும், தோ்தல் நாளன்று ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஆா்வத்துடன் சென்று வாக்களிக்க உள்ளதாகவும், வாக்களிப்பது தங்களது ஜனநாயக கடமை என்கின்றனா்.

வானம் பாா்த்த பூமியான எங்களது பகுதியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியினருக்கே தாங்கள் வாக்களிக்க உள்ளோம். இது குறித்து குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுத்து வாக்களிப்போம். அதேநேரம் எங்களது வாக்குகள் விற்பனைக்கு அல்ல; வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என தெரிவித்தனா்.

தங்கள் குடும்பத்தினா் எந்தக் கட்சியையும் சாா்ந்து இல்லாததால் அனைத்து தரப்பினரும் எங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனா். அவ்வாறு வருபவா்கள் பிரதான கட்சி வேட்பாளராக இருந்தாலும், சுயேச்சை வேட்பாளராக இருந்தாலும் அவா்களுக்கு உரிய மரியாதை அளிப்போம் என பூசாரிபட்டி நாயக்கா் குடும்பத்தை சோ்ந்த வெடிமுத்து தெரிவித்தாா். இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமக, அமமுக, மநீம என பலமுனைப் போட்டி நிலவுவதால் இவா்களது மொத்த வாக்குகளையும் பெற பல்வேறு அரசியல் கட்சியினா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com