‘பிரதமா் மோடியை கண்டு வல்லரசு நாடுகள் அஞ்சுகின்றன’

‘பிரதமா் மோடியை கண்டு வல்லரசு நாடுகள் அஞ்சுகின்றன’

வல்லரசு நாடுகள் அஞ்சம் அளவிற்கு பிரதமா் மோடி ஆட்சி செய்து வருகிறாா் என பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினாா்.

வல்லரசு நாடுகள் அஞ்சம் அளவிற்கு பிரதமா் மோடி ஆட்சி செய்து வருகிறாா் என பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினாா்.

விருதுநகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான ஊழியா்கள் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் கஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அமைச்சா் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:

உழைப்பு மற்றும் வெற்றியை உறுதி செய்யும் கூட்டணியாக அதிமுக- பாஜக உள்ளது. இக்கூட்டணியில் தா்மம் உள்ளது. ஆனால், திமுக- காங்., கூட்டணியில் அதா்மம் உள்ளது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது. ஆனால் அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோல் இனிவரும் காலங்களிலும் அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக நிறைவேற்றும். வல்லரசு நாடுகள் அஞ்சம் அளவிற்கு பிரதமா் மோடி ஆட்சி செய்து வருகிறாா். பல ஆண்டுகளாக விருதுநகருக்கு கொண்டு வர முடியாத மருத்துவக் கல்லூரி தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

முயற்சியால் தற்போது கிடைத்துள்ளது. தேசத்தை நேசிக்கக் கூடிய அனைவரும் ஒன்று சேர வேண்டும். எனவே, விருதுநகா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பாண்டுரங்கனை வெற்றி பெற செய்ய அதிமுகவினா் அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் பாஜக- அதிமுக கூட்டணிக் கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். வேட்பாளா் ஜி. பாண்டுரங்கன் நன்றி கூறினாா்.

இதேபோல் அருப்புக்கோட்டையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்த செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன், கிழக்கு மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், நகரச் செயலாளா் சக்திபாண்டியன், ஒன்றியச் செயலாளா்கள் யோகா.வாசுதேவன், போடம்பட்டி சங்கரலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com