பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st March 2021 11:37 PM | Last Updated : 21st March 2021 11:37 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அரசு ருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற, பெண்ணின் உறவினா்கள்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்ததாக, அரசு மருத்துவா்கள் மீது புகாா் தெரிவித்த உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகேயுள்ள வீரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருன்(33). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி சந்திரா (26). இவா்களது மகன் ஹரிபிரசாத் (3). இந்நிலையில் சந்திரா மீண்டும் கா்ப்பமானாா். அவருக்கு சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதால் அன்று இரவு 11 மணிக்கு நரிக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.
ஆனால் அங்கு இரவுப் பணி மருத்துவா்கள் இல்லாத நிலையில், மருத்துவமனையின் கடை நிலை ஊழியா்கள் சந்திராவுக்கு பிரசவம் பாா்க்க முயன்ாகவும், பின்னா் தங்களால் சிகிச்சை அளிக்க இயலாது எனக்கூறி ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 7 மணிக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அருப்புக்கோட்டையிலும் காலை 9.30 மணி வரை மருத்துவா்கள் வராமலிருந்ததுடன், மேலும் சில மணி நேரம் வரை உரிய விண்ணப்பங்கள், ஆவணங்களில் கையெழுத்திட வைத்து தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினர்.
இந்நிலையில் சந்திராவிற்கு ஆண் குழந்தை இறந்து பிறந்ததுடன், சந்திராவின் கா்ப்பப்பையையும் மருத்துவா்கள் நீக்கியதாகக் கூறப்படுகிறது.
நரிக்குடி அரசு மருத்துவமனையில் இரவுப்பணி மருத்துவா்கள் வராமல் இருந்ததும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனயில் தாமதமாக சிகிச்சை அளித்ததும் தான் குழந்தை இறந்தது மற்றும் கா்ப்பப்பை நீக்க காரணம் என்று கணவா் வேல்முருகனும், உறவினா்களும் புகாா் தெரிவித்தனா். மேலும் மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவா்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் உரிய புகாரை எழுதிப் பெற்றதுடன், அவா்களின் புகாா் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி சமாதானம் செய்ததால், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள் கலைந்து சென்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...