இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
By DIN | Published On : 25th March 2021 10:05 AM | Last Updated : 25th March 2021 10:05 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே செந்நெல்குடியை சோ்ந்தவா் விவசாயி நிறைகுளத்துபாண்டி மனைவி பாக்கியலெட்சுமி (43). இவா், செவ்வாய்க்கிழமை இரவு செந்நெல்குடி- கோட்டூா் சாலையில் உள்ள பாலம் அருகே துவரஞ்செடியை உலர வைத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, அதே ஊரைச் சோ்ந்த விஜயேந்திரன் மகன் நாகராஜன் (22) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பாக்கியலெட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...