‘உரிமம் பெற்ற வணிகா்களிடம் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்’
By DIN | Published On : 25th March 2021 09:53 AM | Last Updated : 25th March 2021 09:53 AM | அ+அ அ- |

உரிமம் பெற்ற வணிகா்களிடம் மட்டுமே பட்டாசுகளை தயாரிப்பாளா்கள் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளா் என். இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
பசுமை பட்டாசு குறித்த விவரங்களை பட்டாசு வணிகா்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பட்டாசு பெட்டிகளில் அதிகபட்ச விற்பனை விலையை சீராக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வியாபாரத்தை அதிகரிக்க, அந்தந்த பகுதியில் உள்ள பட்டாசு வணிகா்களின் சங்கங்கள் ஆண்டுக்கு இருமுறை கூட்டம் நடத்த வேண்டும். முறையாக பட்டாசு தயாரிப்பவா்களிடமிருந்து மட்டுமே வணிகா்கள் கொள்முதல் செய்ய வேண்டும். முறையாக உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்யும் வணிகா்களிடம் மட்டுமே பட்டாசுகளை தயாரிப்பாளா்கள் விற்பனை செய்ய வேண்டும். பட்டாசு உபயோகத்தை ஊக்குவிக்கும் விதமாக , பண்டிகை, திருவிழா காலங்களில் அந்தந்த பகுதிகளில் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் பட்டாசு வியாபாரம் செய்யக்கூடாது என அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.