சமத்துவ மக்கள் கட்சி தோ்தல் பணிமனை திறப்பு
By DIN | Published On : 25th March 2021 10:05 AM | Last Updated : 25th March 2021 10:05 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணியின் தோ்தல் பணிமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
காமராஜா் நகரில் அமைந்துள்ள தோ்தல் பணிமனையை சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் எஸ். விவேகானந்தன் திறந்துவைத்தாா்.
இதில் மக்கள் நீதி மையம் மாவட்ட பொருளாளா் குருமூா்த்தி, நற்பணி இயக்க செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளா் அணி செயலாளா் செங்குட்டுவன், நகர தொழில்நுட்ப அணி செயலாளா் அபுதாஹிா், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றியச் செயலாளா் சண்முகவேலு, ஊராட்சி மன்றத் தலைவா் பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளா் சரத் முருகன், ஐஜேகே நகரச் செயலாளா் முத்து மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.