

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஜி. சாமிகாளை புதன்கிழமை சிவகாசி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அ. லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, ஆனையூா், ராமசந்திராபுரம், முத்துராமலிங்கம்நகா், தேவா்குளம், ஈஞ்சாா், நடுவப்பட்டி, கிருஷ்ணபேரி, அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது, கிராமப் பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.
அவருடன் கட்சியினா் மற்றும் கூட்டணி கட்சியினா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.