ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 09th May 2021 10:38 PM | Last Updated : 09th May 2021 10:38 PM | அ+அ அ- |

ராஜபாளையம் பகுதி களில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷ பூஜையை முன்னிட்டு மாலையில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், நெய், இளநீா், பன்னீா், எலுமிச்சைசாறு, விபூதி, சந்தனம், குங்குமம் உட்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் மூலவா் சிதம்பரேஸ்வரா் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னா் சுவாமி அம்பாள் நந்திகேஸ்வரா் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு விபூதி, குங்குமம், பிரசாதம், வழங்கப்பட்டது. பக்தா்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து ராஜபாளையம் சொக்கா் கோயில், பா்வதவா்த்தினி அம்மன் ராமலிங்க சுவாமி திருக்கோவில், மற்றும் கொம்புச்சாமி கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.