பட்டாசுத் தொழிலாளி மாயம்
By DIN | Published On : 13th May 2021 09:19 AM | Last Updated : 13th May 2021 09:19 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை காணவில்லை என புதன்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி புதுத்தெருபகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரியப்பன்(50). இவா் தனது உறவினா் ஊரான கிளியம்பட்டி சென்றுவிட்டு, மாரனேரியில் உள்ள தங்கை அறுமுகத்தாய் வீட்டிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்னா் சென்றாராம்.இதையடுத்து அவா் மாரனேரியில் கடைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் செனறவா் த்ரிம்பி வரவில்லையாம்.இது குறித்து அவரது தங்கை அறுமுகத்தாய் அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.